துபாய்: துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பு வரும் 19 தேதி மாலை மீலாத் பெருவிழாவை நடத்துகிறது.
துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப் பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) இந்த விழா நடக்கும்.
இதில் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.
இலங்கை புஷ்ரா (நற்செய்தி) மாத இதழ் ஆசிரியர் ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்த மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத், ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
By: செவத்தப்பா
On: 19 Mar 2008 12:08 pm
இதுபோன்ற தகவல்களை எப்பொழுதும் பிரசுரம் செய்தால், என்போன்ற அயல் நாட்டில் வாழும் தமி்ழர்களுக்கு மி்கவும் உபயோகமாயிருக்கும்; நன்றி, வணக்கம்! -செவத்தப்பா, துபை, ஐக்கிய அறபு அமீரகம்
By: செவத்தப்பா
On: 19 Mar 2008 12:08 pm
இதுபோன்ற தகவல்களை எப்பொழுதும் பிரசுரம் செய்தால், என்போன்ற அயல் நாட்டில் வாழும் தமி்ழர்களுக்கு மி்கவும் உபயோகமாயிருக்கும்; நன்றி, வணக்கம்! -செவத்தப்பா, துபை, ஐக்கிய அறபு அமீரகம்
Reply | Report abuse
By: BANU
On: 19 Mar 2008 03:10 pm
It seems that Sevathappa is not a true muslim otherwise he would say Assalamu Alaikkum. God bless to Sevathappa. THE Main message of celebrating Milad El-Nabi is to adhere and follow teachings of Islam narrated in Hadiths namely: Buhari, Muslim, Ibn Majah Thirmidthi, Abu Dawood & Al-Naseih and Holy Qur'an, whereas now what is happening in Muslim World is very strange. Muslim only rembers the birth day of Prohet becuase it is a Holiday and doing all bad things during this celebration.
Reply | Report abuse
By: செவத்தப்பா
On: 19 Mar 2008 12:08 pm
இதுபோன்ற தகவல்களை எப்பொழுதும் பிரசுரம் செய்தால், என்போன்ற அயல் நாட்டில் வாழும் தமி்ழர்களுக்கு மி்கவும் உபயோகமாயிருக்கும்; நன்றி, வணக்கம்! -செவத்தப்பா, துபை, ஐக்கிய அறபு அமீரகம்
Reply | Report abuse