clear
clear
clear
x

இந்திய, கத்தார் வர்த்தக உறவுக்கு வயது 5000 ஆண்டுகள்!

சனிக்கிழமை, மார்ச் 29, 2008, 12:55[IST]
{image-Mesopotamia-Ziggural250_29032008.jpg thatstamil.oneindia.in}துபாய்: சிந்து சமவெளி நாகரீக காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு கல்லறைத் தோட்டம், கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய துணைக் கண்டத்திற்கும், மெசபடோமியா, அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே நீண்ட வர்த்தக தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கத்தாரில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிந்து சமவெளி காலத்தில் இருந்ததைப் போன்ற தோட்டமாக உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கும், அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்புகள் நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் முகம்மது அலி அல் சுலைதி கூறுகையில், கத்தாரின் வட மேற்கு கடற்கரைப்பகுதியில் இந்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்லறைத் தோட்டம் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்தான் இருந்தது.

மேலும், இப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் அரேபிய துணைக் கண்டத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

சிந்து வெளிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தகம் தொடர்பாக இங்கு வந்திருக்க வேண்டும். போர்சலின் உள்ளிட்டவற்றை இங்கிருந்து வாங்கி தங்களது பகுதிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மிகப் பெரிய அளவில் இரு துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

இந்த கல்லறைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான தற்காலிக குடியிருப்புகள் உள்ளன. வர்த்தகர்கள் வந்து தற்காலிகமாக இங்கு தங்கிச் செல்ல இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதேபோன்ற தற்காலிகக் குடியிருப்புகள் குவைத், அபுதாபியிலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.


படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: www.tamilnation.org
பதிவு செய்தது: 30 Mar 2008 10:51 pm
The TAMILS are an ANCIENT people. Their history had its beginnings in the rich alluvial plains near the southern extremity of peninsular India which included the land mass known as the island of Sri Lanka today. The island plant and animal life evidence the earlier land connection with the Indian sub continent. So too do satellite photographs which show the submerged land between Dhanuskodi on the south east of the Indian sub-continent and MANNAR in the north west of the SRI LANKA. Some researchers have concluded that it was during the period 6000 B.C. to 3000 B.C. that the island separated from the Indian sub continent and the narrow strip of shallow water known today as the Palk Straits came into existence. "DRAVIDIANS, whose descendents still live in Southern India, North and East of Sri Lanka, established the first city communities, in the Indus valley, introduced irrigation schemes, developed pottery and evolved a well ordered system of government." (Reader's Digest Great World Atlas, 1970)

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்