Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 கவிதை
   கட்டுரை
   சிறுகதை
   அறிமுக எழுத்தாளர்கள்
   குறள்
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை » முழு விபரம்
ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு ஆளெடுப்பு
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 17:59 [IST]

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை.

கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.

பத்ரே பதவிக்கு ஒரு பட்டமும், உள்ளூர் பிஷப் பட்டியலில் இடம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான வயது 34 ஆகவும், உயரம் 160 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 77 செ.மீ இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசிநாள் 24.1.09

விண்ணப்பங்களை தலைமை ஆள் சேர்ப்புமையம், செயிண்ட் ஜார்ஜ்கோட்டை, சென்னை-600009 அல்லது ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், கருடா லைசன்ஸ், திருச்சிராப்பள்ளி -620 001 என்ற முகவரிக்கு, புகைப்படம் ஒட்டிய உரிய விண்ணப்பப் படிவத்தில் அனுப்ப வேண்டும்.


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Senseless
பதிவு செய்தது: 14 Jan 2009 4:38 pm
Why there is a requirement of a certain height and chest size for the post of clergymen? It is utter nonsense.

பதிவு செய்தவர்: இந்திய ராணுவத்தில் மதபோதகர் பண
பதிவு செய்தது: 12 Jan 2009 8:25 pm
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை. கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India