Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 கவிதை
   கட்டுரை
   சிறுகதை
   அறிமுக எழுத்தாளர்கள்
   குறள்
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை » முழு விபரம்
அந்தமானில் வள்ளுவர் சிலை-நெப்போலியன் திறக்கிறார்!

நாகர்கோவில்: அந்தமானில் புதிதாக நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் நெப்போலியன் திறந்து வைக்கிறார்.

சென்னை விஜிபி உலக தமிழ்ச் சங்கம், அந்தமான் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடியில் உருவாக்கப்பட்ட ஆறரை அடி உயரமுள்ள இந்த கற்சிலை, அந்தமான் துறைமுகப் பூங்காவில் நிறுவப்படவுள்ளது. மத்திய இணையமைச்சர் நெப்போலியன் வருகிற 7ம் தேதி சிலையை திறந்து வைக்கிறார்.

மயிலாடி சிற்பி நல்லதாணு உருவாக்கியுள்ள இந்த வள்ளுவர் சிலை, கடந்த மாதம் மயிலாடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பலில் அந்தமானுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
இம் மாதம் 6, 7, 8ம் தேதிகளில் அந்தமானில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும், திருக்குறள் குறித்த கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.

வி.ஜி.பி சந்தோஷம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட 100 தமிழ் அறிஞர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

'குமரியில் வள்ளுவ நாடும், வள்ளுவர் மலையும்' என்ற தலைப்பில் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப் பொதுச்செயலர் எஸ். பத்மநாபன் உரையாற்றுகிறார்.



படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Raman
பதிவு செய்தது: 04 Nov 2009 1:31 pm
வள்ளுவர் சிலைக்கு இலங்கை தமிழர் குருதியால் அபிஷேகம் செய்வது நல்லது.

பதிவு செய்தவர்: வின்
பதிவு செய்தது: 04 Nov 2009 8:56 am
எங்கே அந்த புகழ் பாடும் சினிமாக்காரர்களும், கவிதை பாடும் புலவர்களும்? ஓஹ் கருணாநிதிக்கு மட்டுமே அவர்கள் வருவார்களோ? திருவள்ளுவரினால் என்ன பயன் இன்தா கொமாளிகள்ளுக்கு

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India