Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 கவிதை
   கட்டுரை
   சிறுகதை
   அறிமுக எழுத்தாளர்கள்
   குறள்
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை » முழு விபரம்
பிரசவத்தை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் அமெரிக்க பெண்!

மின்னபோலிஸ்: அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த 23 வயது ஆசிரியை, தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்யவுள்ளார்.

அவரது பெயர் லின்சி. ஆசிரியையாக உள்ளார். 23 வயதாகும் லின்சி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது அவருக்கு முதல் குழந்தையாகும்.

தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்ய அவர் விரும்பினார். இதன் மூலம் உலகெங்கும் உள்ள இளம் தாய்மார்களுக்கு பிரசவம் குறித்த பயத்தைப் போக்கி அதனை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என லின்சி கருதுகிறார்.

தான் ஒரு ஆசிரியையாக இருப்பதால் இதை ஒரு பாடம் நடத்துவது போல நினைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும் தனது பிரசவத்தை ஒளிப்பதிவு செய்து வைத்து அதை பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்காலத்தில் போட்டுக் காட்டப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19ம் தேதி லின்சிக்குக் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் டேட் குறித்துள்ளனர். அன்றைய தினம் மாம்ஸ் லைக் மி என்ற இணையதளத்தில் லின்சியின் பிரசவத்தை நேரடி ஒளிபரப்பில் காணலாம்.

லின்சிக்கு பிரசவ வலி ஏற்படுவது முதல் குழந்தை பிறந்து வெளியே வரும் வரையிலான காட்சிகளை இதில் நேரடியாக காட்டப் போகிறார்களாம்.

இருப்பினும் இந்தத் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மட்டுமே இந்த நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்.

இதுகுறித்து லின்சி கூறுகையில், இப்படிச் செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிகப் பெரிய நிகழ்ச்சியாகும். இதை என்னைப் போன்ற இளம் தாய்மார்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன், அவ்வளவுதான் என்கிறார் லின்சி.



படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தெரிந்தவன்
பதிவு செய்தது: 08 Nov 2009 12:16 am
நவம்பர் 19ம் தேதி லின்சிக்குக் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் டேட் குறித்துள்ளனர். அன்றைய தினம் மாம்ஸ் லைக் மி என்ற இணையதளத்தில் லின்சியின் பிரசவத்தை நேரடி ஒளிபரப்பில் காணலாம். ஆனால் லின்சிக்கு குழந்தை பிறந்து விட்டது

பதிவு செய்தவர்: Half Vessel
பதிவு செய்தது: 07 Nov 2009 6:07 pm
This is not to be telecast as it create a scard about delivery among the chidren and young girls, they are not enough meatured to understand this. only medical world should know about this.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India