Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 கவிதை
   கட்டுரை
   சிறுகதை
   அறிமுக எழுத்தாளர்கள்
   குறள்
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை » முழு விபரம்
தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ருக்ஷானாவுக்கு வீர விருது வழங்க சிபாரிசு

Rukhsana
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீடு புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை துணிச்சலுடன் தாக்கி ஒருவனை சுட்டு வீழ்த்திய வீரப் பெண் ருக்ஷானாவுக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் என்.என்.வோரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர் வோரா அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், வீரப் பெண் ருக்ஷானாவின் செயல் மிகவும் தீரமானது. அவரும், அவரது சகோதரரும் சேர்ந்து செப்டம்பர் 27ம் தேதி நடந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்றது மிகவும் பாராட்டுக்குரியது.

எனவே அவருக்கு தேசிய வீர விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக மாநில டிஜிபியிடம் அறிக்கை கேட்டிருந்தேன். தற்போது அறிக்கை வந்து விட்டது.

ருக்ஷனாவுக்கு தேசிய வீர விருது வழங்குமாறு மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அப்துல்லாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சரவணன்
பதிவு செய்தது: 08 Nov 2009 11:59 am
இந்திய முஸ்லிம்கள் என்றுமே தீவிர வாதத்திற்கு துணை போவது இல்லை என்பதை உன் செயலால் நிருபித்து விட்டாய் சகோதரி.மிக்க நன்றி.

பதிவு செய்தவர்: சிங்கை சித்திக்
பதிவு செய்தது: 07 Nov 2009 9:39 pm
தெரிந்துகொள்ளுங்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தெரிந்துகொள்ளுங்கள் இந்திய வாழும் முஸ்லீம்களாகிய நாங்கள் என்றுமே தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை.ஆதரிக்கவும் மாட்டார்கள்.இந்தியாவுக்கு துரோகம் நினைக்கவும் மாட்ட்டார்கள். நாங்கள் அந்நியர் இல்லை .நாங்களும் இந்நாட்டின் பூர்வ குடி மக்கள். நாங்கள் மதத்தால் இஸ்லாமியன் என்றாலும் எங்களது தேசம் இந்தியா தான் , அந்நிய தேசங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு கிடையாது.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India