clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 11:57[IST]
Vote this article
Up  
Down  


கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில் தமிழ் மென்பொருட்களை சுலபமாக பொருத்துவது எப்படி என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிலரங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், பயிலரங்கில் தமிழ் மென்பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிலரங்கில் பங்கேற்கவும் கட்டணம் எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் 050 6550245 அல்லது 050 6514825 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். வருகிற 20ம் தேதி மாலை 6 மணிக்கு பயிலரங்கம் நடைபெற உள்ளது. பயிலரங்கம் நடக்குமிடம் முன்பதிவின் போது தெரிவிக்கப்படும்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!