clear
clear
clear
x

திருப்பதி சார்பில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 11, 2009, 12:45[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 108 ஜோடிகளுக்கு சென்னையில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 50 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது. இதில் 5 கட்டமாக 33 ஆயிரத்து 360 திருமணங்கள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் 108 திருமணங்களை நடத்த தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் நடந்தன. சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் 108 ஜோடிகள் திருமணத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே உள்ள வி.வி.ஆர். தர்மசாலா தேவஸ்தான கட்டிடத்தில் இன்று காலை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

108 ஜோடிக்கும் தேவையான தங்க தாலி, மெட்டி, மாலை உள்பட திருமணத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு்ள்ளது.

திருமணம் செய்த ஒவ்வொரு ஜோடியும் திருப்பதி கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பேரை உடன் தரிசனத்துக்கு அழைத்து செல்லலாம்.



படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: jeyan
பதிவு செய்தது: 14 Dec 2009 10:49 am
இதில் பாதி திருட்டு கல்யாணம் என கேள்வி,

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!