clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

'திருமங்கலத்து யானை'

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 13, 2009, 14:23[IST]
Vote this article
Up  
Down  


திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறு
கண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் - உன்னால்
பழி தீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

என்று எழுதியுள்ளார் கருணாநிதி.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: லகுட பாண்டி
பதிவு செய்தது: 13 Jan 2009 10:33 pm
இப்படி கவிதை பாடியே தமிழநை முன்னேர விடாமல் செய்த கருணாநிதியை யானை காலால் இடறும்படி தீர்ப்பளிக்கிறேன்

பதிவு செய்தவர்: parimel Azhagar
பதிவு செய்தது: 13 Jan 2009 3:08 pm
The interpretation : உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன் தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்; உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்; கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்! Thirumangalam Elephant : Azhagiri கண்ணிருந்தும் குருடர்களாய்க் கற்பனை பல செய்து, கதைகள் கட்டி- பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும் பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை பழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ; Gumbal, Kurudar : Jayalaitha, Vaiko, Gopalasamy , Naresh Gupta, Viaya Kanth, and communists. பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற, கொம்புகளால் குத்தியும்; கால்களால் மிதித்தும் - உன்னால் பழி தீர்க்க முடியுமெனினும் Though you (Azhagiri) can demolish all your opponents as an elephant, பதிலுக்குப் பதில் என்றில்லாமல்; திருமங்கலத்து யானையாம் நீ; திருக்குறள் வழி நிற்பதால் இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாண நன்னயஞ் செய்து விடுவாய்! Do not finish them now , wait for some more time and finish. - Parimel Azhagar

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!