Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தின பலன்
   வார பலன்
   ஜோதிட செய்திகள்
முதல் பக்கம் » ஜோதிடம் » Weekly » முழு விபரம்
இந்த வார ராசிபலன் (20.11.09 முதல் 26.11.09 வரை)

Mesamமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)

பொது: தடைகள் அகலும். வெற்றி கைகூடும். பொருளாதாரம் ஏற்றம் பெரும். பிரச்சினைகள் சரியாகும்.

பெண்களுக்கு: பண விஷயத்தில் மன வருத்தம் ஏற்படலாம். சாமர்த்தியாக செயல்படவும். செலவுகள் அதிகரிக்கும். வேலையில் திருப்தி நிலவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் பிரச்சினை ஏற்படலாம். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. உயர் அதிகாரிகளிடம் கூடுதல் கவனம் தேவை.

Resabamரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

பொது: காரியங்களை திட்டமிட்டு ஆற்றுங்கள். பேச்சில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களால் பிரச்சினை ஏற்படலாம். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

பெண்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும், கடன் தொல்லை அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. பொறுமையுடன் செயல்படவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். முயற்சிகளில் கவனம் தேவை.

Midunamமிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொது:
முக்கிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும். கஷ்டமான வேலையை எளிதில் செய்ய முடியும். பயணங்களால் சிக்கல் ஏற்படலாம், கவனம் தேவை. பண வரவு சுமாராக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரியம் கூடி வரும். வெளியூர் வாய்ப்பு உண்டாகும். பண வரவு தள்ளிப் போகும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனம் தேவை. ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு.

Kadagamகடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொது: காரியத் தடை ஏற்படும். கவனக்குறைவு பிரச்சினைகளுக்கு வித்திடும். பொருளாதார ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு: எடுத்த காரியம் சிறப்பாக முடியும். வேலைப்பளு கூடும். மனதில் மகிழ்ச்சி குடியேறும். அலைச்சல் குறையும். வார இறுதியில் சந்தேஷ செய்தி வந்து சேரும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருக்கவும். திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களால் பிரச்சினை இருக்காது. முக்கிய முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை எடுக்கலாம்.

Simmamசிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

பொது: கடுமையாக உழைப்பீர்கள். தடைகளை மீறி வெற்றி பெறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் கூடவே இருக்கும்.

பெண்களுக்கு: பொருளாதாரம் சுமாரான முன்னேற்றத்தையே காணும். பொறுமை, திட்டமிடல் அவசியம். கடன் தொல்லை தலையைத் திண்ணலாம்.

வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். இடமாற்றத்தையும் எதிர்பார்க்கலாம்.

Kanniகன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொது: காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். திருப்பங்களை சந்திக்கலாம். குழப்பங்கள் அகலும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் திருப்தி நிலவும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். தடங்கலாகி வந்த காரியம் கை கூடும்.

Thulamதுலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொது: சிறு சிறு தடைகள் வந்து மனதை வருத்தும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சுப காரியம் கூடி வரும். பொருளாதாரம் ஏற்றம் பெறும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப காரியம் கூடி வரும். மனதுக்குப் பிடித்த காரியம் நடந்தேறும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் கூடுதல் கவனம் தேவை. முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். புதிய முயற்சிகளில் நிதானம் காட்டலாம்.

Viruchagamவிருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)

பொது: காரிய வெற்றி உண்டு. தோல்விகளால் மனம் தளர மாட்டீர்கள். தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி குடியேறும்.

பெண்களுக்கு: தொலைதூரத்திலிருந்து நற்செய்தி வந்து சேரும். அலைச்சல் குறையும். கவலைகள் மறையும். கையில் பணம் புரளும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களால் நல்லது நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

Dhanusuதனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: திட்டமிட்டு நடக்கவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பொருள் வரவு சிறப்பாக இருக்கும். வேலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு: குடும்பத்தில் புத்திர பாக்கியம் கூடி வரும். மனக் கவலை நீங்கி, மகிழ்ச்சிகளைக் காண்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையில் திருப்தி நிலவும்.

வேலை பார்ப்போருக்கு: வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் தீவிரம் காட்டலாம். சிலருக்கு இடமாற்றம் அதிருப்தியைத் தரலாம்.

Magaramமகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது: வருவாய் அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். முக்கிய செய்தியை எதிர்பார்க்கலாம். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும்.

பெண்களுக்கு: உடல் நலனில் அக்கறை தேவை. அலைச்சலைக் குறைக்கவும். முக்கிய முடிவுகளில் நிதானம் தேவை. பண வரவு திருப்திகரமாக அமையும். பொருள் வரவால் மனம் மகிழ்ச்சி அடையும்.

வேலை பார்ப்போருக்கு: நினைத்தது நடக்கும். மேலதிகாரிகளிடம் நற் பெயர் கிடைக்கும். இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது.

kaumbamகும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொது: தடைபட்ட காரியம் கை கூடி வரும். தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். நேர விரையத்தை குறைக்க முயற்சியுங்கள். தெய்வ வழிபாடு கூடுதல் பலன் தரும். மனக் கவலை நீங்கும்.

பெண்களுக்கு: பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் தொல்லை சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு போகும் வாய்ப்பு உள்ளது.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் பிரச்சினை குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். ஒத்துழைப்பு அதிகரிப்பதால் வேலையில் பிரச்சினைகளும் குறையும்.

meenamமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: கடுமையாக உழைப்பீர்கள். அதற்கேற்ற பலனும் கூடி வருவதைக் காண்பீர்கள். மன வேறுபாடுகளால் பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு: வி்ட்டுக் கொடுத்து செயல்படுவது பல பலன்களைத் தரும். வாக்குக் கொடுக்கும் முன்பு நன்கு யோசித்துக் கொள்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் கவனம் தேவை. மேலதிகாரிகளுடன் பிரச்சினை வராது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தடங்கலாகி வந்த காரியங்களை முடிக்க தீவிரம் காட்டலாம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: jananielangovan
பதிவு செய்தது: 21 Nov 2009 12:16 pm
sir full dedails in the rasipalen thank you sir

பதிவு செய்தவர்: tamsel
பதிவு செய்தது: 03 Nov 2009 3:06 pm
உங்களுக்கு வேற வேலை இல்லையா. உங்கள மாதிரி ஆளுங்களாலதான் பல பேரோட வேல கெடுது. நல்லாஇருங்க லகர பாண்டிகளா

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India