என்னதான், திரு. ராஜு எல்லாக் குழப்பங்களுக்கும் தன்னையே பொறுப்பாளியாக ஆக்கிக்கொண்டாலும், இது ஒரு சாதாரண விவகாரமாகத் தெரியவில்லை. எந்த ஒரு நிறுவனமானாலும், அந்த நிறுவனத்தை இயக்குவதாகக் கருதப்படுவது அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவே. நிறுவனத்தில் எடுக்கப்படவேண்டிய எந்த ஒரு முடிவுக்கும் அனைவரது ஒப்புதலையும் எல்லா நேரங்களிலும் பெறுவது கடினம் என்பதால், தலைமைச் செயல் அதிகாரி என்பவர், அந்த இயக்குனர் குழுவின் பிரதிநிதியாகச் செயல்பட அதிகாரம் பெற்றவர். ஆனால், இது போன்ற ஊழல் விவகாரம் நடைபெற்றால், அதற்கு அந்தத் தலைவர் மட்டுமல்லாது, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், தலைமை நிதி அதிகாரி, நிர்வாக அதிகாரி, சட்ட ஆலோசகர்கள், தணிக்கை அதகாரிகள் ஆகிய அனைவருமே பொறுப்பாவார்கள். அதனால், சத்யம் ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், இயக்குனர்களுக்கும் திரு. ராஜு கடிதம் எழுதி தன்னுடைய தவறை தானாகவே ஒப்புக்கொண்டாலும், அவர் தன்னுடன் சேர்த்து, நிறுவன இயக்குனர்கள் மற்றும் 53000 ஊழியர்கள் உட்பட அனைவரையும் பாதாளத்துக்கு இழுத்து வந்து விட்டார். சத்யம் நிறுவனத்தை வைத்துக்கொண்டு மனவாடுகள் இவ்வளவு காலம் ஆட்டம் போட்டார்கள். ஒரு வகையில் இந்த சம்பவம் அவர்களுக்கு ஒரு பாடமே.
The govt tax deparment should be more vigilant in all companies tax submission. Should not be complacent with their prompt tax payment and assuming they are honest and truthful tax payers. Swindlers are all over in all ranks and file.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ... [ Read Article ]