மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு நன்கு முன்னுக்கு வந்திருக்க வேண்டிய ஒரு நிறுவனம், இதுபோன்று தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்குண்டு சின்னாபின்னப் பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதே. இந்தளவுக்கு மோசடி செய்து வர்த்தகம் செய்யவேண்டிய கட்டாயம் என்ன என்பது விளங்கவில்லை. ஒருவேளை இந்திய கணிப்பொறித்துறையில் தங்களது ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்று நாட்டுக்கு உணர்த்துவதற்கோ என்னவோ. எது எப்படியோ, "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற கூற்றுக்கு ஒரு சிறந்த உதாரணமாகிவிட்டது சத்யம் நிறுவனம். ஒருவேளை, இது போன்ற மோசடியில் சாமானிய மனிதன் ஈடுபட்டிருந்தால், அவனுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இது பெரிய நிறுவனம் மற்றும் தொழிலதிபர் தொடர்பான விவகாரம் என்பதால், சட்டம் எந்தளவுக்குத் தன் கடமையை செய்ய அனுமதிக்கப் படும் என்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதுபோன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள், பெயர் மற்றும் எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கை வைத்து தாங்கள் சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களை நினைத்தால்தான் பரிதாபமாயிருக்கிறது. அது அவர்களின் தவறுமல்ல. காரணம், இதுபோன்ற நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கும், அரசாங்கத்தும் தரும் தகவல்களின் மீது நம்பிக்கை கொண்டே இதுபோன்ற முதலீடுகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
மும்பை: சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சி, இன்று பங்குச் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. ... [ Read Article ]