இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை.
கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். ... [ Read Article ]