clear
clear
clear
x
முதல் பக்கம் » சினிமா » ஹீரோ » முழு விபரம்

ரஜினிக்கு 'கெஸ்ட் ரோலா?'- மோகன்லால்

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2008, 16:58[IST]
{image-mohanlal250_28082008.jpg thatstamil.oneindia.in}கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.

குசேலன் படத்தின் ரிசல்ட் ரஜினி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குசேலன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை கெஸ்ட்ரோலில் பார்ப்பதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

இருப்பினும், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள், வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு கெஸ்ட் ரோலாகட்டும், சாதாரணமாக வந்து போகும் கேரக்டராகட்டும், ஒரு சீனில் வருவதாக இருக்கட்டும், எளிதான விஷயம். ஆனால், கமல், ரஜினி அப்படி நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் மோகன்லால்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 3:53 pm
கமல் - ரஜனி ஒரு ஒப்பீடு ஊருக்குள்ளே இப்படி பேசுறானுங்கோ: கமல் நல்ல நடிகன் தான், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல அவரால் நாடகமாட முடியுமா? ஒக்கனேக்கல் விஷயத்திலே என்னமா ஆடினார்: நாடகம். கமலுக்கு பாடத்தான் தெரியும்: எங்கள் அண்ணன் ரஜனி மாதிரி ஜால்ரா அடிக்கத்தெரியுமா? கமல் 10 அவதாரமாக வேஷம் போட்டிருக்கலாம். ஆனால் எங்கள் தலைவன் ரஜனி .. ஒவ்வொரு படத்திலும் சொட்டை தலைக்கு விக் வைத்து நடிப்பது தெரியுமா. கமல் கதை எழுதலாம், எங்கள் அண்ணன் ரஜனி .. அவர் விடாத கதைகளே இல்லை. (இமைய மலையிலே 2000 ஆயிரம் ஆண்டு வாழ்கின்ற சாமியாரை சந்தித்தாராம்). கமல் தன்னுடைய ரசிகர்களை நற்பணி இயக்கம் என்று அழைத்தார்.. ஆனால் எங்கள் தலைவன் ரஜனியே : தன்னுடைய ரசிகர்களை பண்ணிங்க என்று அழைத்தார் எனக்கு பின்னாலே ஒரு கூட்டமிருக்கு (பாட்சா) பண்ணிங்க தான் கூட்டமா வரும் (சிவாஜி) கமல் பெரிய சாதனை நடிகராக இருக்கலாம்ஈ பல விருதுகளை வாங்கியிருக்கலாம் .. ஆனால் எங்கள் அண்ணனுடைய குசேலன் படத்தை ஒரு மாதத்துக்குள் தியேட்டரை விட்டே வெளிலே எடுத்துவிட்டனர். இந்த சாதனையை கமலால் முறியடிக்க முடியுமா???? கமல் நன்றாக ஆடுவார், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல் அவரால் "பல்டி" அடிக்க முடியுமா ????? பல்டி ஸ்டார் வாழு;க !!! எங்கள் அண்ணனுக்கு மண்டையிலே மயிரில்லாமல் இருக்கலாம்.... ஆனால் ரசிகர்களை ஏமாத்துகின்ற மூழை இருக்கு ( நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்... தலைவா நீ சொன்னதெல்லாம் பொய்யா?).
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 4:05 pm
நான் ரஜனிக்கு எதிரி அல்ல. பல படங்களை பார்த்து இருக்கிறேன் ரசித்து இருக்கிறேன். ஆனால் எப்பொழுது பஞ்ச் டயலாக் பேசி ஜங்களை ஏமாற்ற வெளிக்கிட்டாரோ.. அன்றையிலிருந்து ... எனக்குள் ரஜனியைப்பற்றியொரு வெறுப்பு. படத்திலே பஞ்ச் டயலாக் பேசலாம்... அது தவறிலை;லை .. ஆனால், அரசியலை அதோடு சேர்த்து ... தமிழ் நாட்டு அரசியல்காரனுங்க தனக்கு கீழே மாதிரி நினைச்சு பஞ்ச் டயலாக் பேசியது .. என்னாலே தாங்க முடியவில்லை. எப்பொழுது ரஜனி தன்னுடைய பஞ்ச் டயலாக்கை நிறுத்துகிறாரோ.. ( தேவையில்லாமல் ஜனங்களை ஏமாற்றாமல் பேசலாம்) அன்றைக்கு நானும் இப்படி எழுதுவதை நிறுதத்துகிறேன். - அவனை நிறுத்தச்சொல், நானும் நிறுத்துகிறேன்.

பதிவு செய்தவர்: eelacholan
பதிவு செய்தது: 30 Aug 2008 2:48 pm
hey muthu who told you kuselan its a box office in uk, are u frm eelam living in uk. am living in uk, i dnt think so its block buster, our ppl watch any movies they dnt give any attention to rajini, and also he is not a world leader ar se, have u heard of prabhakaran the legendry leader for tamils, he is our leader mate thx

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!