செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோ » முழு விபரம்

விஜய்க்கு ஹீரோயின் திண்டாட்டம்!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

வேட்டைக்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைககள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஏவி.எம். பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விஜய் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் படம்தான் உருவாகாமால் இருந்து வந்தது. முரட்டுக்காளையின் ரீமேக்கில் பாலசுப்ரமணியத்திற்கு விஜய் நடித்துக் கொடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பாலசுப்ரமணியம் படத்திற்கு ரெடியாகி விட்டார் விஜய். வேட்டைக்காரன் என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில் இது என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது ஹீரோயின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் முதல் சாய்ஸ் ஆசின். எனவே ஆசினை அணுகினர். அவரோ கை நிறைய இந்திப் படங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார். கொஞ்சம் காத்திருக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால் காத்திருப்புக்கு நேரம் இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.

இதையடுத்து இலியானாவை அணுகினர். இவரை ஏற்கனவே இருமுறை தனது படங்களில் நாயகியாக்க முயன்றார் விஜய். இருமுறையும் டேக்கா கொடுத்து விட்டார் இலியானா. விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே அவர் டேக்கா கொடுத்து வருகிறார் என்பது வேறு விஷயம்.

இந்த முறையும் இலியானா, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து யாரை அணுகுவது என்ற யோசனையில் விஜய் தரப்பு உள்ளதாம். திரிஷாவை அணுகும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு வேளை நயனதாரா பக்கம் விஜய் சாயக் கூடும் என்றும் தெரிகிறது.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: vijai    பதிவு செய்தது: 08 Sep 2008 10:49 pm

dai vijai nee oru ponpalaida unakku oru pomapliya parathesi appa kitta ketta nalla kuddi kodupaar rasikan padam pola ,nalla muthuku theikalam .nalla kudumpamda samy






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India