Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோ » முழு விபரம்
சிங்களப் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா

நடிகர் சூர்யா விரைவில் ஒரு சிங்களர் தயாரிக்கும் சிங்களப் படத்தில் நடிப்பதாக கடந்த சில தினங்களாக பரபரப்பாக செய்தி வெளியாகி வந்தது (தட்ஸ்தமிழில் அல்ல).

இந்த நிலையில், அப்படி ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.

இது தொடர்பாக, சூர்யாவின் மீடியா மேலாளர் நிகில் அனுப்பியுள்ள சூர்யாவின் மறுப்பறிக்கை:

"இலங்கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப்படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்’ என்றொரு செய்தி வெளிவந்து படிப்போரை மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

நான் இப்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்திப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

மூன்றாவதாக உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இவை தவிர வேறு எந்தப் படத்திற்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தி.

சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அது என்ன படம்...?

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் சுரேஷ் குமாரசிங்கே என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்திய - இலங்கைக் கூட்டுப் படமாக இது உருவாகிறதாம். இதில் சூர்யா, சிம்ரன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் இப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுரேஷ் குமாரசிங்கே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சூர்யா, சிம்ரன் நடிக்க இப்படத்தைத் தயாரிக்கவுள்ளோம். இப்படம் தொடர்பாக நவம்பர் 12ம் தேதி சென்னைக்கு வரவுள்ளோம். முன்னதாக நவம்பர் 5ம் தேதி அல்லது 6ம் தேதி வருவதாக இருந்தோம். ஆனால் அங்கு சில அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் 12ம் தேதி வருகிறோம்.

ஒருவேளை சூர்யா பின்வாங்கினால், வேறு நடிகரை நடிக்க வைப்போம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக சிங்களரின் படத்தி்ல் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானவுடன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அதிர்ச்சி வெளியிட்டிருந்தார்.

தமிழக மக்கள் அனைவரும் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சிவதாஸ்
பதிவு செய்தது: 11 Nov 2009 10:56 pm
சூர்யா உனக்கு நாமம் தான்; வாழ்க உன் புகழ் நாதாரி இருந்த இடம் தெரியாமல் போகபோகிறாய்; நெடுமாறன் ஐயாவை மதியடா ,நாதாரி

பதிவு செய்தவர்: Ramesh
பதிவு செய்தது: 11 Nov 2009 7:47 pm
இப்படியே நெடுமாறன் அந்த மைராண்டி இந்த மைராண்டிக்கு எதற்கு தமிழக மக்கள் கவலை பட வேண்டும் சிந்தால படத்தில் நடித்தல் என்ன தவறு எதோ இலங்கையில் உள்ள தமிழன் எல்லாம் சின்தலவன் கூட சேர்ந்து வளதிருப்பது போன்று இந்த நெடுமாறன் கூடம் தமிழக தமிழர்களை ஏமாற்றுகிறது அங்கே கொழும்பு சென்று பார்த்தல் இந்த பாமர நெடுமாறன் போன்றோர்க்கு விளங்கும் தமிழனும் சின்தலவனும் பகத்து பகத்து வீடுகளில் ஒன்றை வாழ்கிறதை கண் கூடாக பார்க்கலாம் இந்த கிழட்டு நாதாரி நெடுமாறன் இப்படியே தமிழனையும் சின்தலவனையும் ஒன்றாய் சேரவே விடமாட்டன்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India