செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

'வேகம்' விரும்பும் அர்ச்சனா!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

வேகம் படத்தில் அறிமுகமான அர்ச்சனா தமிழில் அடுத்த படத்தில் இப்போதுதான் நடித்து முடித்துள்ளார். ஆனால் கன்னடம், தெலுங்கில் நிறையப் படங்களில் நடித்து விட்டார், நடித்தும் கொண்டிருக்கிறார். தமிழிலும் வேகமாக நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

ஹைதராபாத்திலிருந்து வந்த அழகிய புயல் அர்ச்சனா. எஸ்.வி.சேகரின் மகன் அஷ்வின் சேகர் ஹீரோவாக அறிமுகமான வேகம் படம்தான் தமிழில் அர்ச்சனாவுக்கு முதல் படம். அடுத்து தமிழகம் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் கன்னடம் மற்றும் தெலுங்கில் நிறையப் படங்களை கைவசம் வைத்துள்ளாராம் அர்ச்சனா. காதல் கொண்டேன் படத்தின் தெலுங்கு ரீமேக், திமிரு படத்தின் கன்னட ரீமேக்கில் அர்ச்சனாதான் நாயகி.

இதுதவிர தெலுங்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா ஆகியோருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏன் தமிழில் மட்டும் இவ்ளோ ஸ்லோ என்று கேட்டால், என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழ் இயக்குநர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க தயார் என்று ஏற்கனவே கூறி விட்டேன்.

நல்ல பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறேன். இதுவரை பெரிய அளவில் வரவில்லை. தமிழிலும் நிறையப் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். தமிழ் எனக்கு நல்ல முகவரியைக் கொடுத்துள்ளது. எனவே தமிழ் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான் என்கிறார் அர்ச்சனா.

அர்ச்சனா குச்சுப்பிடி ஆட்டத்தில் எக்ஸ்பர்ட்டாம். முறையாகப் பயின்றுள்ள அர்ச்சனாவுக்கு குச்சுப்பிடி என்றால் உயிராம்.

நிறையப் படங்களில் நடிக்க வேண்டும், விதம் விதமான கேரக்டர்களில் கலக்க வேண்டும் என்பதுதான் அர்ச்சனாவின் ஒரே லட்சியம். அதற்கேற்ற ரோல்கள் எந்த மொழியில் கிடைத்தாலும் நான் ரெடிதான் என்கிறார் நம்பிக்கையுடன்.

வேகம் பிடிப்பீங்க அர்ச்சனா, கவலைப்படாதீங்க.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Archanas Top view Sangam    பதிவு செய்தது: 22 Aug 2008 11:39 am

If she got acting talent Blend with beauty,then she can survive.






Opinion Poll