செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

'அன்னபூரணி'யை நம்பும் பாவனா!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

ஜெயம்கொண்டான் படத்தில் நான் ஏற்று நடித்துள்ள அன்னபூரணி கேரக்டர் தமிழில் எனது கேரியரை தூக்கி நிறுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தெற்றுப் பல் அழகி பாவனா.

பாவனாவை பெரிய திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம்கொண்டான் மூலம் ரசிகர்களை கலகலக்க வருகிறார் பாவனா.

உன்னாலே உன்னாலே புகழ் வினய்யுடன் இணைந்து இப்படத்தில் கலக்கியுள்ளார் பாவனா. கூடவே லேகா வாஷிங்டனும் இருக்கிறார்.

இப்படத்தில் பாவனாவுக்கு கிராமத்து பெண் வேடமாம். அதேசமயம் வாலிபால் சாம்பியனாகவும் நடித்துள்ளாராம். படத்தில் பாவனாவின் பெயர் அன்னபூரணி.

இந்தக் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ரசித்து செய்துள்ளேன். இப்படத்தில் நான் புத்தம் புதுப் பொலிவுடன் காணப்படுவேன். இதற்கு முக்கிய காரணம் எனது டிசைனர்தான். என்னைப் புத்தம் புதிய பெண்ணாக இதில் அவர் காட்டியுள்ளார்.

இப்படம் வந்த பின்னர் என்னை எல்லோரும் அன்னபூரணி என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்களும் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கைச் சிரிப்புடன்.

இப்படத்தின் மூலம் தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும், கேரியர் நிலை பெறும் என்ற நம்பிக்கையுடனும் பாவனா உள்ளாராம். இப்போதைக்கு பாவனா கையில் தமிழ்ப் படம் ஏதும் இல்லை. தற்போது அவர் மலையாளம், தெலுங்கில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் கொண்டானுக்குப் பிறகு தமிழிலும் தீவிரம் காட்டுவாராம்.

ஜெயம் கொண்டான் மேவ ஜெயதே!


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Bhavana fan    பதிவு செய்தது: 29 Aug 2008 06:17 pm

all the best






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India