செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

அச்சம் நீக்கிய அஞ்சலி!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

அங்காடித் தெரு படத்தின் மூலம் நாயகனாக மலர்ந்துள்ள சின்னாளபட்டி மோகன், காதல் காட்சிகளில் நடிக்க ரொம்பவே வெட்கப்பட்டுப் போய் விட்டாராம். நாயகி அஞ்சலிதான் அவரது அச்சம், மடம், நாணத்தைப் போக்கி துணிச்சலுடன் நடிக்குமாறு ஊக்குவித்தாராம்.

வெயில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் புதிய படம் அங்காடித் தெரு. இதில் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி என்ற நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிப்பது கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் பட நாயகி அஞ்சலி.

வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய இப்படத்தில் புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்து வருகிறாராம் மோகன். ஆனால் காதல் காட்சிகளில்தான் ரொம்ப வெட்கப்படுகிறாராம்.

இதனால் பல டேக்குகள் போக வேண்டிய நிலை. இதை உணர்ந்த நாயகி அஞ்சலி, மோகனுக்கு காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அவருடன் சகஜமாக பேசி, அவரை ஈஸியாக்கி, நடிக்க ஊக்கம் கொடுத்தாராம்.

இதன் பின்னரே, அஞ்சலியுடனான காட்சிகளில் வெட்கம், அச்சம் நீங்கி இயல்பாக நடித்து வருகிறாராம் மோகன்.

புதுமுகமாச்சே முதலில் அப்படித்தான் இருக்கும், போகப் போக 'மைக்' மோகனாகி விடுவார் சின்னாளபட்டி மோகன்!


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: காவலூர் ரவி    பதிவு செய்தது: 07 Sep 2008 11:44 pm

காலம் மாறிப்போச்சுதண்ணே,
ஆண்களாவது வெட்கப்படுகிறார்களே!
படம் பார்ப்பவர்களுக்கெல்லோ
இன்னும் வெட்கமாக இருக்கிறது.






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India