செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

கடலில் சிக்கித் தவித்த நமீதா!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

ஜகன்மோகினி படப்பிடிப்பின் போது நடுக்கடலில் தத்தளித்த நடிகை நமீதாவை மீனவர்கள் மீட்டனர்.

30 வருடங்களுக்கு முன்பு, ஜெயமாலினி நடித்து திரைக்கு வந்த படம், ஜகன்மோகினி. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் நமீதாவாவை வைத்து ரீமேக் செய்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை முரளி சினி ஆர்ட்ஸ் சார்பில் எச்.முரளி தயாரிக்கிறார்.

படத்தின் கதைப்படி, கடலில் மூழ்கி முத்து எடுக்கும் பெண்ணாக நமீதா நடிக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஏற்கனவே ராமேஸ்வரம் கடல் பகுதியில் படமாக்கப்பட்டன. மீதமுள்ள காட்சிகள் அந்தமான் தீவில் படமாக்கப்பட்டன.

இந்தப் படப்பிடிப்புக்காக இரண்டு கப்பல்களை வாடகைக்கு எடுத்திருந்தனர் படப்பிடிப்புக் குழுவினர். கடல் கொள்ளையர்கள் ஒரு கப்பலில் வருவது போலவும், இன்னொரு கப்பலில் வரும் கதாநாயகன் ராஜா, கதாநாயகி நமீதா ஆகிய இருவரும் கடல் கொள்ளையர்களுடன் சண்டை போடுவது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அடிக்கடி நீ்ர் மட்டம் மாறுபடும் தீவுப் பகுதியி்ல் அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டு சூட்டிங் நடந்தது.

அப்போது கடலில் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்ததால் நமீதா உள்ளிட்டோர் பயணம் செய்த கப்பல் நகர முடியாமல் நின்றது. நமீதா 4 மணி நேரம் நடுக்கடலில் தவித்தார்.

உடனே செல்போன் மூலம் கரையிலிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனே அந்த இடத்துக்கு விசைப்படகுகளில் விரைந்து வந்தனர்.

நமீதாவை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Robma Nallavan    பதிவு செய்தது: 21 Nov 2008 06:38 pm

Naatukku romba mukiyamaana news idhu....
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர
This post has been permanently removed following an abuse alert.
This post has been permanently removed following an abuse alert.
This post has been permanently removed following an abuse alert.

[ கருத்தை எழுதுங்கள் ]






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India