செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

காத்திருக்கும் கீர்த்தி   இலவச நியூஸ் லெட்டர் பெற          

கீர்த்த்தி சாவ்லா இரு படங்களை ரொம்ப ஆர்வமாக எதி்ர்பார்த்திருக்கிறார். இரு படங்களும் தன்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு போகும் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்.

அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி என சகலகலா வல்லியாக திகழ்ந்தும் கூட கீர்த்தி சாவ்லா, இன்னும், 'வாவ்'லா என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு பெரிய இடத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்.

உளியின் ஓசையில் நடிப்பில் கலக்கினார். நாயகன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வந்து போனார்.

இந்த நிலையில் இப்போது மகேஷ், சந்தியா மற்றும் பலர் படத்தையும், திருமதி தமிழ் படத்தையும் ரொம்பவே ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளார்.

அதிலும் திருமதி தமிழ் படம்தான் கீர்த்திக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி தயாரிக்க, அவரது கணவர் ராஜகுமாரன் நடித்து, இயக்கும் படம் இது.

இப்படத்தில் தேவயானி நீதிபதியாக வருகிறாராம். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைக் கொண்டது. இதுதான் கீர்த்தியின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.

படத்தில் பிருத்விராஜ் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். படம் முழுக்க கீர்த்திக்கு நன்கு நடிக்கும் வாய்ப்பாம். எனவேதான் இப்படம் தனது மறுபக்கத்தை காட்ட உதவும் என்கிறார் நம்பிக்கையுடன்.

எஸ்.வி.சேகர் தயாரிக்க, அவரது மகன் அஷ்வின் நடிக்க உருவாகும் நினைவில் நின்றவள் படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளாராம்.

நிச்சயமாக, இந்த ஆண்டு கீர்த்திக்கு கீர்த்தி தரும் ஆண்டாக அமையும் என்று நாமும் நம்புவோம்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: லோள்ள்    பதிவு செய்தது: 26 Dec 2008 06:27 pm

எவன் எல்லாம் ஹீரோ வா நடிகரது நு ஒரு வெவஸ்தை இல்லாம போச்சு.....

பதிவு செய்தவர்: vvv    பதிவு செய்தது: 26 Nov 2008 03:26 am

comedy







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India