clear
clear
clear
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
எடையைக் குறைக்கும் கஜோல்
வியாழக்கிழமை, ஜனவரி 8, 2009, 17:14 [IST]

Kajol with Tanisha
மேலும் புதிய படங்கள்  
ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் மை நேம் இஸ் கான் படத்திற்காக தனது எடையை பெருமளவு குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கஜோல். படத்தில் கிளாமராகவும் தோன்றவிருக்கிறாராம்.

பாலிவுட்டின் வெற்றி ஜோடிகளில் ஒன்று ஷாருக் - கஜோல். இந்த ஜோடி மிகப் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒன்று சேருகிறது.

ஷாருக்கானும், கஜோலும் இணைந்து மை நேம் இஸ் கான் என்ற படத்தில் நடிக்கின்றனர். இதற்காக லாஸ் ஏஞ்சலெஸில் ஷாருக்கான், கஜோல், இயக்குநர் கரன் ஜோஹர் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

இப்படத்தில் என்.ஆர்.ஐ. பெண்மணியாக வருகிறார் கஜோல். இதற்காக உடலை வெகுவாகக் குறைத்து, படு ஸ்லிம்மாக தோன்ற வேண்டும் என்று ஜோஹர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஒரு பயிற்சியாளரை வைத்துக் கொண்டு உடல் எடையைக் குறைத்து பொலிவைக் கூட்டிக் கொண்டிருக்கிறார் கஜோல்.


அந்த பயிற்சியாளர் பரிந்துரைக்கும் உணவு வகைகளை மட்டும் சாப்பிடுகிறார். தினசரி உடற்பயிற்சியும் உண்டு.

இப்படத்தில் சில காட்சிகளில் கிளாமரான காஸ்ட்யூம்களில் வருகிறாராம் கஜோல்.

கஜோலுக்கு மட்டுமல்ல, ஷாருக்கானையும் வெயிட்டைக் குறைக்க உத்தரவு போட்டுள்ளார் ஜோஹர். எனவே அவரும் தனது உடலைக் குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இப்படத்தில் என்.ஆர்.ஐ. முஸ்லீமாக வருகிறார் ஷாருக்கான்.

இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே மெகாஹிட். அந்த வரிசையில் மை நேம் இஸ் கானும் சேரும் என பாலிவுட் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்