போக்கிரி படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி பயமுறுத்திய பிருந்தா பரேக், ஆசின் நாயகியாக நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்திப் படத்தில், வில்லியாக நடிக்கவுள்ளாராம்.
நெட்டை, நெடிசலாக, நல்ல கிளாமர் வாகுடன் இருப்பவர் பிருந்தா பரேக். தமிழில் போக்கிரி படத்தில் இவர் ஒரு டான்ஸுக்கு ஆடியிருந்தார். அதேபோல கன்னடத்திலும் புத்திவந்தா என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்போது மீண்டும் பாலிவுட் திரும்பியுள்ளார். விபுல் ஷா தயாரிக்க, சல்மான் கான், அஜய் தேவ்கன், ஆசின் நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வில்லத்தனமான ரோலில் நடிக்கவுள்ளாராம் பிருந்தா.
ஏற்கனவே கார்பரேட் படத்தில் கெஸ்ட் ரோலில் தலை காட்டியிருந்தார் பிருந்தா. ஆனால் லண்டன் ட்ரீம்ஸில் முழு நீள கலக்கல் வில்லியாக பயமுறுத்தப் போகிறாராம்.
இந்தப் படம் தனக்கு ஸ்டார் அந்தஸ்தை அள்ளிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ள பிருந்தா இன்னொரு சந்தோஷத்தையும் கூடவே பகிர்ந்து கொள்கிறார்.
அதாவது தன்னை எல்லோரும் பிபாஷா பாசுவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்களாம். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் பிபாஷா பாசு என்னை விட அழகானவர், செக்ஸியானவர், திறமையானவர். உண்மையில் அவரை எனது குருவாக நினைக்கிறேன்.
அவர் இப்போதுள்ள இடத்திற்கு நான் வர ரொம்ப காலமாகும் என்கிறார்.
சீக்கிரமா வாங்க பரேக்! பிபாஷாவுக்கு கொடுங்க பிரேக்!!