பூனம் பாஜ்வாவுக்கு தன்னுடைய படங்களில் கட்டாயம் வாய்ப்பு தரவேண்டும் என கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்கிறார் ஜீவா.
தெனாவட்டு படத்தில் ஜீவா - பூனம் பாஜ்வா ஜோடி நடித்தது. அந்தப் படத்துக்குப் பிறகு பூனம்தான் எனக்கு ராசியான நடிகை என்றும் அவரையே ஜோடியாக போடுங்கள் என்றும் தயாரிப்பாளர்களிடம் ஜீவா கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜீவாவின் அடுத்த படமான கச்சேரியிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். மேலும் ஒரு படத்திலும் இவர்கள் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பூனம் பாஜ்வா குறித்து இப்போது வாய் திறந்துள்ளார் ஜீவா.
அவர் கூறுகையில், "தெனாவெட்டு படத்தில் நானும் பூனம் பாஜ்வாவும் சேர்ந்து நடித்தபோது இரு கேரக்டர்களின் ஜோடி பொருத்தமும், சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. இப்போது கச்சேரி ஆரம்பம் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம்.
நான் அவருக்கு சிபாரிசு செய்வதாக கூறப்படுவது உண்மை அல்ல. கதாநாயகியை தேர்வு செய்வது இயக்குனர் உரிமை. அதில் நான் தலையிடுவது இல்லை. இதற்கு முன்னும் அப்படி நடந்ததில்லை..." என்கிறார்.
இப்போது கச்சேரி, சிங்கம்புலி படங்களில் நடித்த பிறகு, ரவுத்திரம் எனும் புதிய படத்தில் நடிக்கிறாராம் ஜீவா.