Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » சந்திப்போமா » முழு விபரம்
குருசிஷ்யனில் நான் நடிக்கல!-வடிவேலு

Vadivelu and Sona
குருசிஷ்யன் படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படத்துக்காக இயக்குநர் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடப் போகிறேன் என்று நடிகர் வடிவேலு அறிவித்துள்ளார்.

என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இந்தப் படங்கள் குப்பையாக இருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவைதான் அவற்றை பாக்ஸ் ஆபீஸில் தூக்கி நிறுத்தியது.

இப்போது 'குருசிஷ்யன்' என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் சக்தி சிதம்பரம். இந்தப் படத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி... தன்னை வைத்து ஒரு காட்சி கூட எடுக்கப்படவில்லை. எனவே படத்துக்காக தான் வாங்கிய முன் பணத்தை உடனடியாகத் திருப்பித் தந்துவிடுவதாகவும், அந்தப் படத்தில் தான் நடித்திருப்பதாக நம்பி ரசிகர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் வடிவேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் கூறுகையி்ல்,

குருசிஷ்யன் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டதும் ஒரு தொகையை முன் பணமாக கொடுத்தார்கள். நான் முன் பணத்தை வாங்கி மாதக்கணக்கில் ஆகிவிட்டது. இதுவரை என்னை வைத்து ஒருநாள் கூட படப்பிடிப்பு நடத்தவில்லை. ஒருநாள் கூட நான் நடிக்கவில்லை.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக, இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தை தொடர்பு கொண்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், 'குருசிஷ்யன்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.

அதனால் ஷக்தி சிதம்பரத்தின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, எனக்கு கொடுத்த அட்வான்சை திரும்ப பெறும்படி கேட்டுக்கொண்டேன். எனக்கு, அவர்கள் கொடுத்த அட்வான்சை நான் திருப்பி கொடுத்து விடுவேன்.

'குருசிஷ்யன்' படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை இதன் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் அந்தப் படத்தில் இருப்பதாக நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாக வேண்டாம் என்றார் வடிவேலு.

என்ன பிரச்சனையோ..! விசாரிப்போம்...!

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 07 Nov 2009 8:52 pm
வடிவேலு, உன் நடிப்பு ஒரே மாதிரியா இருக்குப்பா. கொஞ்சம் மாத்திக்க. இல்லேன்னா திருவோடு ரெடி பண்ணிக்க.

பதிவு செய்தவர்: யாரு
பதிவு செய்தது: 07 Nov 2009 3:35 pm
யோவ், வடிவேலு, என்னமோ நீ ஒரு தலைவரு, தொண்டர்களுக்கு உத்தரவு போடுறமாதிரி சொல்றே. நீ என்ன சும்மா நடிக்கிற காசு வேங்கிட்டுதனே நடிக்குற. நீ நடிக்களைனே நநங்க படம் பார்க்க கூடாத ? ஏன்டா எங்களைக் கொள்றீங்க ?

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India