Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » முழு விபரம்
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தல்: கலைப்புலி ஜி சேகரன் வெற்றி!

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தல்: கலைப்புலி ஜி சேகரன் வெற்றி!

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தலில் கலைப்புலி ஜி சேகரன் 91 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே ராஜன் தோல்வியடைந்தார்.

சென்னை- காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகில் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று. 2 வருடங்களுக்கு ஒருமுறை இச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2009-2011-ம் ஆண்டுக்கான தேர்தல், சென்னை அண்ணாசைலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்து வந்த 'கலைப்புலி' ஜி.சேகரனும், கே.ராஜனும் போட்டியிட்டார்கள்.

ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணிவரை நடந்தது. நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் முன்னிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு, மாலை 5.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜி.சேகரன் 91 வாக்குகளில் வெற்றி

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், 'கலைப்புலி' ஜி.சேகரன் வெற்றி பெற்றார். அவருக்கு கிடைத்த ஓட்டுகள் 262. அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.ராஜனுக்கு கிடைத்த ஓட்டுகள் 171.

91 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார் கலைப்புலி ஜி சேகரன்.

கே.ராஜன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ.ஜெயகுமார், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாதுஷா ஆகிய இருவரும் வெற்றி பெற்றார்கள்.

உதவி தலைவர் பதவிக்கு, டாக்டர் பி.காளிதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இணைச்செயலாளர் பதவிக்கு, டி.ராஜகோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்களாக வி.சந்திரமோகன், ஏ.வி.அரசு, ஜி.வேணுகோபால், யு.தனசேகரன், ஆர்.சம்பத், யு.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ராஜாரஹிம், ஈ.மணி, என்.சந்திரன், எம்.கே.குமார், கே.ஆர்.கோபிகிருஷ்ணா, கே.ரங்கநாதன், ஏ.எம்.ஏ.மாலிக், ஜி.டில்லிராஜன், எம்.சுதாகர், டி.ஆர்.ராம்பிரசாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெற்றி பெற்ற ஜி சேகரனுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: பனிமலர்
பதிவு செய்தது: 17 Nov 2009 12:20 am
சன் டிவி தான் எல்லாம் படங்களை விலை பேசுகிறதே, பிறகு எதற்கு உங்களுக்கு ஒரு சங்கம் அதுக்கு ஒரு தலைவர் அதுக்கு ஒரு தேர்தல், அதற்க்கு ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி தேர்தல் பார்வையாளர் என்று. சரியான காமேடிடா, சும்மா தான் கேட்கிறான் உங்களுக்கு சுத்தாமாக வேலையே இல்லையா.

பதிவு செய்தவர்: vee sangam
பதிவு செய்தது: 16 Nov 2009 3:42 pm
மொத்த சங்கமே சன் டிவி கிட்ட இருக்கு அப்பறம் எதுக்கு எலக்க்ஷன் எல்லாம்

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India