[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்

பாக்.கை குஷிப்படுத்தும் மாதுரி!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

பாகிஸ்தான் விமான பயணிகளை குஷிப்படுத்த மாதுரி தீக்ஷித்தின் பாடல்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின்னர் மாதுரி நடித்த படம் ஆஜா நச்லே. ஆனால் இப்படம் ரசிகர்களை குஷிப்படுத்த தவறி விட்டது. மாதுரியின் பழம் பெருமையை ரசிகர்கள் மறக்காவிட்டாலும் கூட அவரது ரீ என்ட்ரி அவர்களைக் கவரவில்லை.

ஆனால் பாகிஸ்தான் மாதுரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான பிஐஏ, தனது பயணிகளை குஷிப்படுத்துவதற்காக மாதுரி மேஜிக் என்ற பெயரில் அவரது பாடல்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து சவூதிக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிஐஏ மூலம் பயணிக்கும் பயணிகள் மாதுரியின் அழகிய ஆட்டம், பாட்டம் நிறைந்த பாடல் காட்சிகளை விமானத்தில் ரசிக்கலாம்.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிறப்புக் காட்சி அக்டோபர் வரை தொடரும்.

மாதுரி தவிர ராணி முகர்ஜியின் பாடல்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சிக்கும் பிஐஏ ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தில் கி பாடீன் என பெயரிடப்பட்டுள்ளது.

துபாய், சவூதி, அமெரிக்கா செல்லும் பிஐஏ பயணிகள் ராணி முகர்ஜி ஷோவை ரசிக்கலாம்.

இதுதவிர பிஐஏவின் பயணிகளுக்கான பத்திரிக்கையிலும் ராணி முகர்ஜி ஒரு காலம் எழுதி வருகிறார்.

இது போதாதென்று பாலிவுட் திரைப்பட விழாக்களின் தொகுப்புகள், இந்திய நடிகர், நடிகையரின் மேடை நிகழ்ச்சிகளும் கூட பிஐஏ விமானங்களில் பயணிகளுக்குப் போட்டுக் காட்டப்படுகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்பட பாகிஸ்தானியர்கள் பலரும் பாலிவுட் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கிலானி, ஐஸ்வர்யா ராயின் பரம விசிறி. ஷாருக்கான் என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

கடந்த மே மாதம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாகிஸ்தான் போயிருந்தபோது கையோடு, ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் நடித்த சில படங்களின் டிவிடிக்களை கிலானியிடம் பரிசாக கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தஅளவுக்கு கிலானிக்கு ஷாருக்கையும், ஐஸ்வர்யாவையும் பிடிக்குமாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிஐஏ விமானங்களில் பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டு விட்டது. விரைவில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பாலிவுட் படங்களைத் திரையிடவும் பிஐஏ திட்டமிட்டுள்ளதாம்.


 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !



 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India