இனிமேல் தமிழ் திரைப்பட பாடல்கள், காட்சிகள், டிரெய்லர்கள் ஆகியவற்றை பெற வேண்டுமானால், தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு ரூ. 1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்துள்ளது. 6 டிவி நிறுவனங்களுக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு நிறுவனங்களைத் தவிர மற்ற டிவி நிறுவனங்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு இந்தப் புதிய உத்தரவு பொருந்தும்.
விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் - தூர்தர்ஷன், சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி, ஜீ டிவி. இவர்கள் ரெகுலராக புதிய படங்களின் சானல் உரிமையைப் பெறுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இவர்களுக்கு மட்டும் இலவசமாகவே தொடர்ந்து கிளிப்பிங்குகளை வழங்க தீர்மானித்துள்ளது தயாரிப்பாளர் கவுன்சில்.
ஆனால் இந்த ஆறு நிறுவனங்களைத் தவிர மற்றவர்கள் ரூ. 1 லட்சம் கட்டினால்தான் கிளிப்பிங்குகள் கிடைக்கும்.
டிவி நிறுவனங்கள் தவிர பிற கேபிள் டிவி ஆபரேட்டர்களும், கிளிப்பிங்குகள் வேண்டுமானால் இனி லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். இது பிக்சட் கட்டணம்.
இன்று முதல் இந்த கட்டண நிர்ணயம் அமலுக்கு வருவதாக தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்துள்ளது.
பதிவு செய்தவர்: கோபக்காரபயபுள்ளே
பதிவு செய்தது: 20 Nov 2008 08:18 pm
Royal Cable Vision (அழகிரி கேபிள்) க்கு இது பொருந்துமா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Maduraikaran
பதிவு செய்தது: 21 Nov 2008 03:27 pm
Porunthum aanaa porunthathu
பதில் | அவதூறு குறித்து தகவல் தர