clear
clear
clear
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்
ஹைதராபாத்-திரிஷா-பங்களா
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 20:12 [IST]

Trisha
மேலும் புதிய படங்கள்  
டோலிவுட்டுக்குப் போகும்போதெல்லாம் ஹோட்டல்களில் தங்கி வாசம் செய்து வந்த திரிஷா, இனிமேல் ஹோட்டல்களில் தங்கப் போவதில்லை. காரணம், சொந்தமாக ஹைதராபாத்தில் ஒரு பக்காவான பங்களாவை விலைக்கு வாங்கி கிரயம் பேசி விட்டாராம்.

சென்னைக்காரப் பெண்ணான திரிஷா, தெலுங்கிலும் படு பிசியான நடிகை. இந்த ஆண்டு அவர் அதிகம் நடிக்கப் போவது தெலுங்குப் படங்களில்தான். காரணம், ஏராளமான புதிய தெலுங்குப் படங்களில் அவர் புக் ஆகியுள்ளார்.

எனவே 2009ம் ஆண்டு திரிஷாவுக்கு, மணவாடு ஆண்டாக அமையப் போகிறது.

இந்த நிலையில் இதுவரை ஹைதராபாத் ஹோட்டல்களில் வாசம் செய்து வந்த திரிஷா, முதல் முறையாக சொந்த பங்களாவில் குடியேறி ஷூட்டிங் போகப் போகிறார்.


ஹைதராபாத்தில் புத்தம் புது பங்களா ஒன்றை சமீபத்தில் வாங்கி கிரையம் செய்துள்ளாராம் திரிஷா. இனிமேல் இங்குதான் அவர் வாசம் செய்யப் போகிறார்.

ஏற்கனவே ஹைதராபாத் ஹோட்டலில் திரிஷா குளித்த காட்சிதான் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இணையத் தளங்களில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

திரிஷாவின் பங்களா வாங்கலுக்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்