clear
clear
clear
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்
ஆதி நாராயணாவில் 'ஆசின்'!
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:27 [IST]

Yogita
யோகிதா   | ஆதி நாராயணா  
மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கும் ஆதி நாராயணா படத்தில் ஆசின் என்ற கேரக்டரில் நடிக்கிறார் பெங்களூர் மாடல் அழகி யோகிதா.

பெங்களூரைச் சேர்ந்தவர் மாடல் அழகி யோகிதா. அங்கு ஏராளமான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்பவர். மாடலிங்கிலும் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பதற்காக சென்னை வந்தார் யோகிதா.

வந்தவர், ஆதி நாராயணா படத்தின் இயக்குநர் கண்ணில் படவே, டக்கென்று யோகிதாவை தனது படத்தின் 2வது நாயகியாக்கி விட்டாராம் இயக்குநர்.


இதனால் படிக்க வந்தவர் இப்போது நடிக்கவும் செய்கிறார். இருந்தாலும் படிப்பையும் விடவில்லையாம். படிப்பும், கூடவே நடிப்புமாக டபுள் ரோலில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

எனக்கு அனிமேஷன் படங்களை தயாரிக்கத்தான் எனக்கு அதிக ஆசை. அதனால்தான் விஸ்காம் தேர்வு செய்து படிக்க வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிப்பு வாய்ப்பு கிடைத்தது. சரி நடித்துத்தான் பார்ப்போமே என்று இறங்கி விட்டேன் என்கிறார் அழகாக சிரித்தபடி.

சரி, படத்தில் யோகிதாவின் கேரக்டர் பேர் என்ன தெரியுமா. ஆசினாம்.

ஏன் இப்படி? இப்படிப் பெயர் வைத்ததில் ஏதாவது 'உள்நோக்கம்' இருக்கிறதா? என்று கேட்டால், அய்யய்யோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, டைரக்டரைத்தான் கேட்கணும் என்று கூறி எஸ்கேப் ஆகி விட்டார் யோகிதா.

யோகிதாவுக்கு, கோலிவுட் யோகம் தருகிறதா என்று பார்ப்போம்..

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்