clear
clear
clear
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்
சுந்தர்.சியுடன் இணையும் ஹேமமாலினி!

கவர்ச்சி களேபர நாயகி ஹேமமாலினி சுந்தர்.சியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

நான் அவன் இல்லை 2ம் பாகத்தில் நடித்து வரும நாயகிதான் ஹேமமாலினி. படு கவர்ச்சியாக காணப்படும் ஹேமமாலினி இந்திரவிழாவிலும் பின்னியிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு மசாலா மன்னன் சுந்தர்.சியுடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்துள்ளது.

மசாலா படப் புகழ் ஷக்தி சிதம்பரம் அடுத்துத் தயாரிக்கவுள்ள படம் குரு சிஷ்யன். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குரு சிஷ்யன் படத்தின் ரீமேக் என இது முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கதை வேறு என்று கூறுகிறார்கள்.

ஷக்தி சிதம்பரத்துடன் ஆரம்ப காலத்தில் கலக்கி எடுத்த சத்யராஜும், பின்னர் இணைந்து பெடலெடுத்த சுந்தர்.சியும் இணைந்து இதில் கலக்கவுள்ளனர்.

கதைப்படி, சத்யராஜ் கிராமத்து கோடீஸ்வரராக வருகிறாராம். அவரிடம் பணியாற்றுபவராக வருகிறாராம் சுந்தர்.சி.

இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடி கிடையாது. ஆனால் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஹேமமாலினி.

படத்தின் முக்கிய அம்சம் வடிவேலு. கடந்த சில படங்களாக சுந்தர்.சியுடன் இணைந்து நடிக்காமல் இருந்தார் வடிவேலு. இருவருக்கும் இடையே லடாய் ஏற்பட்டதால் சேரவில்லை.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வடிவேலுவுடன் இணைகிறார் சுந்தர்.சி.

படத்தில் நமீதா இருக்கிறாரா என்பதை இதுவரை ஷக்தி தெரிவிக்கவில்லை. ஆனால் ஷக்தியின் படங்களின் அபார சக்திகளில் நமீதாவும் ஒருவர் என்பதால் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிட்டில் நமீதாவையும் சேர்த்து விட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

 
 
  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்