பொங்கலுக்கு வேட்டைக்காரனை வெளியிடுவதாகக் கூறிவந்த சன் பிக்ஸர்ஸ், இப்போது அதே பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஜக்குபாயையும் வாங்கியுள்ளது.
இதனால் வேட்டைக்காரன் பொங்கலுக்கு வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு.
வேட்டைக்காரன் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாகக் கூறித்தான் சன் பிக்ஸர்ஸ் ஏவிஎம்மிடம் வாங்கியது. ஆனால் கலைஞர் டிவி தனது தயாரிப்பான ஆதவனை வெளியிட தயாராக இருந்ததால், வேட்டைக்காரன் தள்ளி வைக்கப்பட்டது.
இப்போது பொங்கலுக்கு விஜய் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராதிகாவின் தயாரிப்பில் சரத் குமார் நடிக்க, ரவிக்குமார் இயக்கியுள்ள ஜக்குபாய் படத்தையும் சன் பிக்ஸர்ஸ் வாங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படமும் தீபாவளிக்கு வரவிருந்ததுதான். ஆனால் திடீரென தள்ளிப் போடப்பட்டது. இப்போது பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். அப்படியெனில் பொங்கலுக்கு எந்தப் படம் முதலில் வெளியாகும்... வேட்டைக்காரனா? ஜக்குபாயா?.