clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

கோவா சர்வதேச இந்தியப் பட விழாவில் பசங்க

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 16:30[IST]
Vote this article
Up  
Down  


கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இடம் பெறும் 26 படங்களில் தமிழிலிருந்து பசங்க படம் இடம் பெற்றுள்ளது.

கோவாவில் 40வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 23ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினராக வஹீதா ரஹ்மான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் மம்முட்டி இடம் பெறுகிறார்.

தொடக்க விழாவை கபீர் பேடியும், திவ்யா தத்தாவும் தொகுத்து அளிப்பார்கள்.

இந்த விழாவில் இந்தியப் பிரிவில் மொத்தம் 26 பொழுது போக்கு மற்றும் டாக்குமென்டரிப் படங்கள் இடம் பெறுகின்றன.

இதில் தமிழிலிலிருந்து பசங்க படம் மட்டும் தேர்வாகியுள்ளது. மலையாளத்திலிருந்து குட்டி ஷிராங்கு, கேழ்க்குன்னுண்டோ ஆகியவை இடம் பெறுகின்றன. கன்னடத்திலிருந்து இஜ்ஜோடு இடம் பெறுகிறது.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 20 Nov 2009 10:32 pm
நல்ல படம் , வாழ்த்துகள்

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்