தி த்ரீ கிங்ஸ் என்று ஒரு படம் தயாராகிறது பாலிவுட்டில். முன்னாள் நடிகை பர்வீண் பாபியின் நிஜவாழ்க்கைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. அமிதாப், மகேஷ் பட், ஜீனத் அமன் என முன்னாள் இந்நாள் பிரபலங்கள் பலரை நினைவுறுத்தும் பாத்திரங்கள் நிறைய உள்ளனவாம் படத்தில்.
இந்தப் படத்தில் பர்வீன் பாபியாகவே நடிக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நடிகை ஷிகா பூரி. இந்தப் படத்தை இயக்குபவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரினால்ட் பெய்ன்ஸ்.
த்ரீ கிங்ஸில் ஷிகா பூரியின் திறமையைப் பார்த்துவிட்டு, அடுத்து தனது ஆங்கிலப் படத்திலும் வாய்ப்பு தர முன்வந்துள்ளாராம் பெய்ன்ஸ்.
ஆங்கிலமும் ஹிந்தியும் சரிவிகித்தில் கலந்த 'ஹிங்கிலீஷ்' படமாக உருவாகும் த்ரீ கிங்ஸ் உலகமெங்கும் வெளியாகிறது.
கனடாவின் ஸ்பெக்ட்ரா மல்டிமீடியா நிறுவனம் மற்றும் வொயிட் டுலிப் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் இது.
சர்கார் கி துனியா போன்ற படங்களிலும், பல டிவிஷோக்களில் கவர்ச்சியாக கலக்கியவர் ஷிகா பூரி.&13;