clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

கடலூரில் மாணவர்களிடம் ரத்த மோசடி

[IST]
கடலூர்:

கடலூரில் ஐ.டி.ஐ. மாணவர்களிடம் ரத்த தான முகாம் நடத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள அரசு ஐ.டி.ஐ. மாணவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் தனியார் மருத்துவனையில் விற்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த ஐ.டி.ஐக்கு சக்திவேல் என்பவர் வந்தார். தன்னை சென்னை லயன்ஸ் கிளப் உறுப்பினர் என்று அறிமுகம் செய்து கொண்டஅவர், மாணவர்களை ரத்த தானம் செய்ய வைக்குமாறு ஆசிரியர்களிடம் கோரினார்.

ஒரு நல்ல காரியத்தை செய்கிறோம் என்று நினைத்த ஆசிரியர்கள் ரத்த தான முகாமுக்கு அனுமதி தந்தனர். கடந்த திங்கள்கிழமை இந்தமுகாம் ஐ.டி.ஐ. வளாகத்திலேயே நடந்தது.

சக்திவேல் உள்ளிட்ட பலர் வந்து மாணவர்களிடம் இருந்து ரத்தத்தை எடுத்தனர். ஆனால், அதற்கு முன் செய்ய மாணவர்களிடம் செய்யவேண்டிய ரத்தப் பரிசோதனையையோ, ரத்த அழுத்த சோதனையையோ செய்யவில்லை.

மாணவர்களின் 300 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை எடுத்தனர். வழக்கமாக எடுப்பதைவிட கூடுதலாக ரத்தத்தை எடுத்ததால் பலமாணவர்கள் மயக்கமடைந்தனர்.

சுமார் 140 மாணவர்களிடம் ரத்தத்தை எடுத்துக் கொணடு சக்தி வேல் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்த சென்ற பின்னர் அவர்கள் மீதுசந்தேகமடைந்த ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்தனர்.

போலீசார் விசாரித்தபோது, மாணவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை அந்தக் கும்பல் ஒரு தனியார் மருத்துவமனைக்கு பல லட்சம்ரூபாய்க்கு விற்றுள்ளது தெரியவந்தது.

வழக்கமாக இது போன்ற ரத்த தான நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் ரத்தம் அரசு ரத்த மையங்களிலோ அல்லது தொண்டு நிறுவனங்களில் ரத்தமையங்களிலோ வைக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

ஆனால், மாணவர்களிடம் ரத்தத்தை உறிஞ்சி அதை தனியாரிடம் விற்றுள்ளார் சக்திவேல்.இதையடுத்து சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் கைதாவார் என்று தெரிகிறது. Mail this to a friend  Post your feedback  Print this page 


User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!