செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

நீங்க ஏன் இத செஞ்சீங்க?: வீராசாமி
திங்கள்கிழமை, மே 12, 2003   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை:

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக ஆட்சியில்தான் அனுமதி தரப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர்செம்மலை கூறியுள்ளது தவறான புகார் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குஅனுமதி தரப்பட்டது என்று அமைச்சர் செம்மலை தவறான புகாரைக் கூறியுள்ளார்.

அப்படியென்றால், அதிமுக ஆட்சியின்போது, 100 கிலோமீட்டர் இடைவெளி விட்டுத் தான் தனியார் மருத்துவக்கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற விதியை திருத்தியது ஏன்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி கூற வேண்டும் என்றுமாணவர்கள் கேட்கிறார்கள். அந்த உறுதிமொழியைத் தர அரசு தயங்குவது ஏன்?.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக அதிமுக அரசின் கொள்கைதான் என்ன என்று கேட்டுள்ளார் ஆற்காடுவீராசாமி.

இங்கே அதிமுக விதியைத் திருத்தியதை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளாரே தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளைஅமைக்க விதி கொண்டு வந்தது திமுக தான் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India