சென்னை:
 |
| டமால் ஆக உள்ள கட்டடங்களில் ஒன்று |
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதையொட்டி - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள்விடுதி, ஆராய்ச்சி கூடம், ஊழியர்கள் குடியிருப்பு உள்பட 14 கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2,000 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டதமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் ரூ.50 கோடிக்கு மேல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் மத்தியஅரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ்அனுப்பியது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதி, அண்ணா பல்கலைக்கழகம் அருகில் புதிய தலைமை செயலகம் கட்ட அனுமதி அளித்தார்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுஉள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள தமிழக அரசு தகவல் தொகுப்பு விரைவு மையத்தைவேறு இடத்துக்கு மாற்ற தலைமை செயலாளர் லட்சுமி பிராணேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதி, ஆராய்ச்சி கூடம், ஊழியர்கள்குடியிருப்பு உள்பட 14 கட்டிடங்களை இடிக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதுகல்லூரிகளுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் விடுதியில் இல்லை.
மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மாணவர் விடுதிகள் திறக்கும் முன்பு, இந்தக் கட்டடங்களை இடிக்க திட்டமிட்டுஇருப்பதாகக் கூறப்படுகிறது.
|
|
| | [an error occurred while processing this directive] | | [an error occurred while processing this directive] |
|  |