clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

லாலு: வீரமணி கடும் தாக்கு!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24, 2004, 5:30[IST]
சென்னை:

ராஷ்டிரீய ஜனதா தளத்தையும் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வையும் ஒழிக்க தேர்தல் ஆணையர்கள் முயற்சிக்கிறார்கள் என்றுதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

லாலு பிரசாத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தோழர்கள் மத்தியில் உரையாடும்போது, ரயில்வே அமைச்சரானதற்கு எங்களுக்கு இனிப்புவழங்கவில்லையே என்று அவர்கள் கேட்டனர். இதையடுத்து அவர் தன் கையிலிருந்த சில 100 ரூபாய் நோட்டுக்களை அந்த மக்களுக்குஅளித்தார்.

இதை படம் பிடித்த வீடியோக்காரர்கள் துரும்பைத் தூணாக்கி மகிழ்கின்றனர். தேர்தல் ஆணையர்களாக இருக்கும் 3 பேரும் பார்ப்பனர்கள்.அவர்கள் இதுதான் வாய்ப்பு என்று லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளத்தினையே ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுப்பவர் வீடியோக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு பகிரங்கமாகவா லஞ்சம் கொடுப்பார்? கேழ்வரகில் நெய்வடிகின்றது என்றால் கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களிடம் செல்வாக்கோடு உள்ள லாலுவை வீழ்த்தவே இப்படி ஒரு திட்டமிட்டதிரைமறைவுச் சதி நடத்தப்படுகிறது. இதற்கு பிகார் மக்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள்.

மயிரைச் சுட்டுக் கரியாக்கிவிட முடியாது. லாலு நெருப்பாற்றிலும் நீந்தி கரை சேருவார். காரணம் அவருக்கு மக்கள் துணை இருக்கிறதுஎன்று கூறியுள்ளார் வீரமணி. Mail this to a friend  Post your feedback  Print this page 


User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்