clear
clear
clear
x

சுகோய் போர் விமானத்தில் பறக்கிறார் கலாம்!

புதன்கிழமை, மே 24, 2006, 5:30[IST]
டெல்லி:

ஜனாதிபதி அப்துல் கலாம் ரஷ்ய போர் விமானமான சுகோய்-30யில் பறக்கவுள்ளார்.

Kalam
ஆரம்பத்தில் போர் விமானியாக வேண்டும் என்ற ஆசையோடு தனது வாழ்வைத் துவக்கியவர் கலாம். ஆனால்,அது நிறைவேறவில்லை. இதையடுத்து ராக்கெட்டுகள், ஏவுகணைகள், அணு குண்டு பக்கமாகத் திரும்பினார்.

இந் நிலையில் உலகின் மிக அதி நவீன போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 விமானத்தில் பறக்க கலாம்ஆசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விமானப் படையிடம் அவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 8ம் தேதி வாக்கில் அவர் சுகோய் விமானத்தில் பறப்பார் என்று தெரிகிறது.

இந்திய விமானப் படையிடம் உள்ள சுகோய்-30 எம்கேஐ ரக விமானத்தில் கலாம் பறக்கிறார்.

SUKHOI 30 fighter jet
புனேயில் உள்ள இந்திய விமானப் படை மையத்தின் 50 ஆண்டு விழா ஜூன் 8ம் தேதி நடக்கிறது. அதில்பங்கேற்கும் கலாம் அப்படியே சுகோயில் பறக்கவுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய கடற்படையின் நீர்மூழ்கியில் கலாம் பயணம் செய்ததுநினைவுகூறத்தக்கது. நீர்மூழ்கியில் பயணித்த முதல் இந்திய ஜனாதிபதி கலாம் தான்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்