செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

மருத்துவ உதவி: கருணாநிதிக்கு மதானி நன்றி
வியாழக்கிழமை, ஜூலை 13, 2006   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

கோவை:

தனக்குத் தேவைப்படும் மருத்துவ வசதியை தந்து உதவியதற்காக தமிழக முதல்வர்கருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய கேரள முதல்வர்அச்சுதானந்தனுக்கும், கோவை குண்டுவெடிப்பு கைதியான அப்துல் நாசர் மதானிநன்றி தெரிவித்துள்ளார்.

கேரளா மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கோவை குண்டுவெடிப்புவழக்கில் சிக்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரளமுதல்வர் அச்சுதானந்தன், கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என கருணாநிதி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்துசென்னையிலிருந்து மருத்துவர் குழு கோவை சிறைக்கு வந்து மதானியைபரிசோதித்தது. அதன் பின்னர் சிறையிலேயே மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி தற்போது மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனது வழக்கறிஞர் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காககருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய அச்சுதானந்தனுக்கும் நன்றிதெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மதானி.

அதேபோல தனக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்ய வைத்ய பார்மஸி நிறுவனத்திற்கும்அவர் நன்றி தெரிவித்துள்ளார்.



 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India