ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் ரகசிய திருமணம்? வியாழக்கிழமை, அக்டோபர் 12, 2006
இலவச நியூஸ் லெட்டர் பெற
மதுரை:
நடிகை ஐஸ்வர்யா ராயும், அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனும் மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக மதுரை வந்ததாக இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னைக்கு வந்திருந்த சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமர்சிங் அங்கிருந்து டெல்லிசெல்லக் கிளம்பினார். ஆனால் விமான நிலையம் வந்த அவர் டெல்லி செல்லவில்லை. மாறாக தனி விமானம்ஒன்றைப் பிடித்து மதுரைக்கு விரைந்தார்.
நேற்று பிற்பகல் 12 மணிக்கு அவர் மதுரை வந்து சேர்ந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காகமதுரை வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தை விட்டுஅவர் கீழிறங்கவில்லை.
கிட்டத்தட்ட 2 மணி நேரமாக அவர் விமானத்தை விட்டு வராததால் விமான நிலைய அதிகாரிகள் மற்றும்பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் நடிகை ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும் அங்கு திடீரென வந்தனர்.
இருவரும் ஒரே காரில் வந்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு இன்னும் கூடியது. இருவரும் நேராகஅமர்சிங் இருந்த விமானத்தில் ஏறி உள்ளே சென்றனர். அதன் பின்னர் அந்த விமானம் மும்பைக்குப் புறப்பட்டுச்சென்றது.
அமர்சிங் வருகை, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திடீர் வருகை ஆகியவற்றால் மதுரையில் பரபரப்புஏற்பட்டது. அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து ரகசிய திருமணம்செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அதை அறிந்தே, அமிதாப்பின் வேண்டுகோளின்படி அவரது குடும்பநண்பரான அமர்சிங் மதுரைக்கு விரைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஐஸையும், அபிஷேக்கையும் அவர் சமாதானப்படுத்தி மும்பைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.அதேசமயம், கொடைக்கானலில் படப்பிடிப்புக்காக ஐஸும், அபிஷேக்கும் வந்திருக்கலாம் எனவும்,அமர்சிங்குடன் சேர்ந்து மும்பை சென்றிருக்கலாம் எனவும் இன்னொரு தகவலும் தெரிவிக்கிறது.
ஐஸ்வர்யா ராயின் திடீர் மதுரை வருகை ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் குறையவில்லை.