செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மரணம்
புதன்கிழமை, நவம்பர் 8, 2006   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை:

முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான கா.காளிமுத்து இன்றுஅதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

Kalimuthuகமுதி அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் பிறந்த காளிமுத்துவுக்கு நிர்மலா,மனோகரி என இரு மனைவியர். இவர்களில் நிர்மலா சில ஆண்டுகளுக்கு முன்மரணமடைந்தார். அவர் இறந்ததிலிருந்தே காளிமுத்து மனம் உடைந்து காணப்பட்டார்.அதுவே அவரது உடல் நலிவுக்கும் முக்கியக் காரணமானது.

சில மாதங்களுக்கு முன் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்துஅவர் உடல் நிலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்துசட்டசபைக்கு தேர்தல் வந்தபோது மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அவரைஜெயலலிதா அறிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக காளித்துவால்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில்காளிமுத்துவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துமதுரையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Kalimuthu in Hospitalகவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந் நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்துமருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர்.காளிமுத்துவின் உடல் முதலில் செனடாப் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குஅதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காளிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப்பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டுதியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும்ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரதுகுடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பு: ஜெ

காளிமுத்துவின் மரணம் அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்ணா நகரில் உள்ள காளிமுத்துவின் வீட்டுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கு காளிமுத்துவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர்அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

காளிமுத்து மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரம், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

காளித்து முத்தமிழறிஞராக, மொழிப் போர் தியாகியாக, மூச்சிலும், பேச்சிலும் தமிழராக வாழ்ந்தவர். தமிழினத்தை சாடுவோருக்கு ஓங்காரகாளியாகவும், தேனினும் இனியத் தீந்தமிழாய் விளங்கிய பாவலருக்கு ஒய்யார முத்தாகவும் விளங்கியவர்.

அதிமுகவின் கண்ணான கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டு மேடைதோறும் முழங்கிய போர்வாள். தனது லட்சியப் பயணத்தில் மாறாத நடைபோட்டவர். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அமைச்சர் பதவியிலும், பேரவைத் தலைவர் பதவியிலும் செம்மையாக பணியாற்றியவர்.

காளிமுத்துவின் இழப்பு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாதது. காளிமுத்துவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அதிமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கும்.அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

காளிமுத்து மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.



 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India