clear
clear
clear
x

பெரியார் சிலை-சேலம் சங்கர மடம் சூறை

புதன்கிழமை, டிசம்பர் 13, 2006, 5:30[IST]
சேலம்:பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் உள்ள காஞ்சி சங்கரமடத்தின் கிளை சூறையாடப்பட்டது.

Kanchi Mutt
சூறையாடப்பட்ட காஞ்சி மடம்

இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மரவனேரி பகுதியில் காஞ்சி சங்கர மடத்தின் அறக்கட்டளை மடம் உள்ளது.இங்கு வேத பாடசாலையும் உள்ளது. ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் அடிக்கடிஇங்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள்.

இந் நிலையில் மடத்திற்கு நேற்று மாலை 5 பேர் அங்கு வந்தனர். ஸ்ரீரங்கத்தில்பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் மடத்திற்குஉள்ளே புகுந்து சூறையாட ஆரம்பித்தனர்.

இதையடுத்து சங்கர மட ஊழியர்கள் அலறிடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இதையடுத்து சாமி படங்கள், இருக்கைகள், மேசைகள், பூஜை பொருட்கள்உள்ளிட்டவற்றை தூக்கி வீசி சேதப்படுத்தினர். ஜெயேந்திரர், விஜயேந்திரர்படங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தொலைபேசிகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. டியூப் லைட், பல்புகளையும் அடித்து நொறுக்கினர்.

சூறையாடலில் ஈடுபட்டவர்கள் வெளியேறிய பின்னர் போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணைமேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பெரியார் திராவிட இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழ்தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

இதேபோல பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து மேட்டூரில் கெம்பிளாஸ்ட்நிறுவன துணைத் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் தாக்கப்பட்டனர்.இதுதொடர்பாக தி.கவைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்