விழுப்புரம் அருகே வினாயகர் சிலைகள் உடைப்பு புதன்கிழமை, டிசம்பர் 13, 2006
இலவச நியூஸ் லெட்டர் பெற
விழுப்புரம்:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பையடுத்து விழுப்புரம் அருகே வினாயகர் சிலைகள்உடைக்கப்பட்டதுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த வினாயகர் சிலையையும்,வெளியே இருந்த இன்னொரு வினாயகர் சிலையையும் சில விஷமிகள் உடைத்து விட்டனர்.
இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் வினாயகர் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டுதிடுக்கிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பொதுமக்கள்நூற்றுக்கணக்கானோர் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறித்த கள்ளக்குறிச்சி உதவி கலெக்டர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்துபொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மேலும் சிலையைஉடைத்தவர்களை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினார்கள்.
வினாயகர் சிலை உடைப்புக்கு எதிராக திமுக, அதிமுகவினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சிலைகள் உடைக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு துண்டு பிரசுரங்கள்கிடந்தன. அதில் அம்பேத்கார், பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இதுஎந்த அமைப்பு என்பது பற்றி குறிப்பிடவில்லை.
உடைக்கப்பட்ட இரு வினாயகர் சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர். சிலைகள் உடைப்பு சம்பவத்தால்சங்கராபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
By: Raj
On: 05 Dec 2006 10:40 am
If these DK guys dont believe in God, let them do the same against all the religions. Why only target Hindus? Try to respect all the religions.
By: Raj
On: 05 Dec 2006 10:40 am
If these DK guys dont believe in God, let them do the same against all the religions. Why only target Hindus? Try to respect all the religions.
Reply | Report abuse
By: random
On: 05 Dec 2006 10:40 am
Atrocious and uncalled for It is EVR who started the process like this.Govt is making film on him only to degrade Hindus ....EVR even asked for seperate nation...How can u spend public money on such an evil force? Is it worse than making film on Gotse...Court should ban it ....Govt shud procecute such criminals
Reply | Report abuse
By: True citizen
On: 05 Dec 2006 10:40 am
What will Mr. Karunanidhi say now? Will he condemn the people who broke the vinayakar statue too or will he keep mum?
Reply | Report abuse