clear
clear
clear
x

திமுக பைட்-வேட்டி கிழியல், கார் எரியல்

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 2, 2007, 5:30[IST]
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் திமுகவினர் இடையே பயங்கர அடிதடி, மோதல் ஏற்பட்டது.

இதில் நகரச் செயலாளர் மண்டை உடைக்கப்பட்டு, அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் அமைச்சர் செ.ம.வேலு, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோர் தனித்தனிகோஷ்டிகளாக இயங்கி வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது முறைப்புகளும்லேசான கெட்ட வார்த்தை திட்டு சண்டைகளும் நடக்கும். ஆனால், இதுவரை அது அடிதடியானதில்லை.

இந் நிலையில் திருவண்ணாமலை நகரச் செயலாளர் தியாகராஜன் காந்தி சிலை அருகே உள்ள பிச்சாண்டிஎம்எல்ஏ அலுலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள்இருந்தனர்.

அப்போது நகரச் செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நகரச் செயலாளர் தியாகராஜன் உருட்டுக் கட்டையால்தாக்கப்பட்டதில் அவரது மண்டையில் அடிபட்டு, பலத்த காயமடைந்தார்.

மேலும் தியாகராஜின் காரும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆட்கள்திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதில் சேர்கள் பறந்தன, வேட்டிகள் உருவப்பட்டு சட்டைகள் கிழிக்கப்பட்டுஅலங்கோலமாயின.

இந்த மோதல் அப்படியே ரோட்டுக்கும் பரவியது. இரு தரப்பினரும் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீதுதாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுக்கியது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பிரித்துவிட முயன்றனர். ஆனால் போலீசாரைதள்ளிவிட்டபடி ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அங்குஅதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு மோதலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நகர செயலாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் காந்தி சிலை முன்பு திடீரென சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் மேலும் அங்கு பதட்டம் உருவானது. காயமடைந்த தியாகராஜன் மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Muthu
பதிவு செய்தது: 05 Dec 2006 10:40 am
Ippadi vanmuraiil yeedu pattavarkal yaarum thi.mu.ka alla. Thi.mu.ka adalerukal yaavarum Periyaarin paasaraiyil paadam payindra nanmuthukkal; Annaavin pattaraiyil pattai theettappatta oli veesum vaira manikal. Avarkalai kutram solla eppadi vandhadhu umakku thunivu ?

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்