Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
புயலும் காற்றும்- கருணாநிதி கிண்டல்
வியாழக்கிழமை, ஜனவரி 4, 2007, 5:30 [IST]
சென்னை:புயலையே பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது காற்றைகைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ளபதில்:

கேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப்பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.?

கருணாநிதி: ஏன் முடியாது? பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர்சிறையில் போட்டிருந்தார்களே.

கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில்அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர்வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசுசினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்திவெளியிட்டுள்ளார்களே?

கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி,திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும்மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.

அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள்இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம்வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர்அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதைவிஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.

அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டுஅவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன்,அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும்.சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன்துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்புபோடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காகஅனுதாப்படுவோம்.

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்தியசெய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்தபோதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளாரே?

கருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால்மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான்பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்?

எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமேஅவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமேஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Solomon
பதிவு செய்தது: 05 Dec 2006 10:40 am
Jayalalitha Is A Stupid Fat Lady.She Doesnt Know How To Run Her Party As Proper Opposition...

பதிவு செய்தவர்: samk
பதிவு செய்தது: 05 Dec 2006 10:40 am
Jaya has proved she is better administrator than the old fox Karunanidhi.KK can do only slimy politics.He has failed miserably in controling Law and Order in the state and the Mullai Periyar Issue.Jaya went to the extent of withdrawing support to the vajpayee Govt on the Cauveri Issue.High time before KK kicks his bucket he has to show he has done something special for the people of tamil nadu.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India