சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய குழந்தைகள்அறிவியல் மாநாட்டில் 13 பேருக்கு இளம் விஞ்ஞானிகள் விருதை குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 94வது இந்திய அறிவியல் மாநாடுபுதன்கிழமை தொடங்கியது. 7ம் தேதி வரை இது நடைபெறுகிறது.
மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடங்கியது.இதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். இதற்காக நேற்று இரவுதிருச்சி வந்த கலாம், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் சென்றார்.
பின்னர் மாநாட்டு மேடைக்கு காலை 9.40 மணிக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் சிறுவர்கள் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார் கலாம். முன்னதாகபிளானட் எர்த் என்று எழுதப்பட்டிருந்த ராட்சத பலூனை அவர் பறக்க விட்டார்.
பின்னர் ஆனந்தராஜா (மதுரை-தமிழகம்), வித்யதாரா (தமிழகம்), சுபா விஜ் (டெல்லி),காம்ரேகர் (கர்நாடகா), குகாலி பிஸ்வாஸ் (ஷில்லாங்), வினோத் குமார் (ஹரியானா),ராஜீவ் சரத்வாட் (உ.பி), கோகட் (மும்பை), மணீஷ் திவாரி (உ.பி), பார்த்தசாரதிமண்டல் (கொல்கத்தா), கெளசிக் (போபால்), சாண்டன் சக்கரவர்த்தி (மே.வங்கம்),நிகார் ராஜன் ஜெனா (வாரணாசி) ஆகியோருக்கு இளம் விஞ்ஞானிகள் விருதைஅப்துல் கலாம் வழங்கினார்.
அதன் பின்னர் பல்வேறு மாநில மாணவ, மாணவியருடன் கலாம் கலந்துரையாடினார்.மொத்தம் 240 மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முற்பகல் 11.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்விருதுநகர் புறப்பட்டுச் சென்றார் கலாம்.
கலாம் வருகையையொட்டி சிதம்பரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.