clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

இலங்கை: பேருந்தில் குண்டு வெடித்து 20 பேர் பலி

[IST]
Srilanka Map
கொழும்பு: மத்திய இலங்கையில், பேருந்தில் குண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இன்று காலை கண்டியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அனுராதபுரத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

தம்புலா நகருக்கு காலை 7 மணியளவில் பேருந்து வந்தது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நின்றபோது, பயங்கர சப்தத்துடன் பேருந்தில் குண்டு வெடித்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த துறவிகள் ஆவர். அனைவரும் மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பிற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது. புலிகள் தரப்பில் இந்த குண்டுவெடிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Rajan
பதிவு செய்தது: 04 Feb 2008 2:32 am
புலிகளை தடை செய்யுமா குண்டு வெடிப்புக்கள்..? தென்னிலங்கையை தொடராய் அதிர வைக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து இலங்கை அரசு வுPடுதலைப் புலிகள் மீது தடையை விதிக்காலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இலங்கை இதைவிட பாரிய அழிவுகளையும் பொருளாதார கட்டுமான சிதைவுக்கு உட்படலாம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு தடைவிதித்த பின்னர் புலிகள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்துவர்கள் எனவும் அதன் தாக்கம் நாட்டை வறுமைக்குள் உள்ளாக்கம் எனவும் அவ்வாறான ஆரம்ப நிகழ்வுகளாகவே பொருளாதார மையங்கள் மீதானதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் நடாத்தப்படும் தாக்குதலாக அமைகிறதென கூறப்படுகிறது.

பதிவு செய்தவர்: Jex
பதிவு செய்தது: 03 Feb 2008 10:22 am
தமிழ் பகுதியில் குழந்தைகளை கொன்றால் தமிழருக்கு புலிகள் மீது வெறுப்பு வரும் என்று இலங்கை அரசு நினைத்து தமிழர் பகுதியில் குண்டு வைக்கிறது. - There is no logic in this statement. வெற்று பேச்சு.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!