clear
clear
clear
x

சரப்ஜித் தூக்கிலிடப்படுவது மேலும் தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29, 2008, 9:54[IST]
இஸ்லாமாபாத்: இந்தியர் சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை 2வது முறையாக பாகிஸ்தான் அரசு தள்ளி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவதாக இருந்தது. இருப்பினும் மத்திய அரசின் கோரிக்கை மற்றும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை, சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மே 1ம் தேதிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மே 1ம் தேதி நெருங்கி விட்ட நிலையில் மறுபடியும் சரப்ஜித் சிங்கை தூக்கிலிட வேண்டாம் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அந்நாட்டு முன்னாள் அமைச்சரும், மனித உரிமை ஆர்வலருமான பர்னி சரப்ஜித் சிங்கை காப்பாற்ற தீவிரமாக முயன்று வருகிறார்.

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசை இதுதொடர்பாக தொடர்ந்து கோரி வருகிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரும் அவரது உயிரைக் காக்க போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்முறை 3 வாரங்களுக்குத் தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு லாகூர் மற்றும் முல்தானில் நான்கு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதில் பலர் பலியானார்கள். இச்சம்பவத்திற்குக் காரணம் சரப்ஜித் சிங் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. ஆனால் சரப்ஜித் சிங் அதற்குக் காரணமல்ல, தவறான முறையில் இதில் சரப்ஜித் சிங் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது அவரது தரப்பினரின் வாதம்.

 


User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்