clear
clear
clear
x

ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது- சிறந்த தமி்ழ் படம் 'வெயில்'

செவ்வாய்க்கிழமை, ஜூன் 10, 2008, 17:23[IST]
{image-priyamani-karthi-250_10062008.jpg thatstamil.oneindia.in}டெல்லி: 2006ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக பிரியாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் சிறந்த படமாக வெயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பருத்தி வீரன் படத்தின் எடிட்டர் ராஜா முகம்மதுவுக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த திரைப்படமாக மலையாளப் படமான புலிஜென்மா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தங்கத் தாமரை விருது வழங்கப்படவுள்ளது.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக இந்திப் படமான லகே ரஹோ முன்னாபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரியாமணி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பருத்தி வீரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அவருக்கு வெள்ளித் தாமரை விருது வழங்கப்படவுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது வங்காள நடிகரான சோமித்ரா சாட்டர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிராபிக் சிக்னல் படத்தை இயக்கிய மதுர் பண்டர்கர் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த படத்திற்கான இந்திரா காந்தி விருதினை காபூல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஏகாந்தம் ஆகிய படங்கள் இணைந்து பெறுகின்றன.

பொழுது போக்குஅல்லாத சிறந்த படத்திற்கான விருதினை அமிதாப் சக்கரவர்த்தியின் பிஷார் ப்ளூஸ் பெறுகிறது.

பருத்தி வீரன் படத்திற்கு பெர்லின் பட விழாவில் சிறப்பு மரியாதை கிடைத்தது. அப்படம் ஆசிய பிரிவில் சிறப்பு நடுவர் விருதையும் வென்றது நினைவிருக்கலாம்.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படத்திற்கான விருது கன்னடத்தில் வெளியான கல்லரளி ஹூவாகி படத்திற்குக் கிடைத்துள்ளது.

சிறந்த சிறுவர் படத்திற்கான விருது கன்னடப் படமான கேர் ஆப் புட்பாத் படத்திற்குக் கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய மாஸ்டர் கிஷன் ஒரு சிறுவன் என்பது நினைவிருக்கலாம். ஜாக்கி ஷ்ராப் இப்படத்தில் நடித்திருந்தார்.

கன்னடத்தில் சிறந்த படமாக காத பெலதிங்களு படம் தேர்வானது.

சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ்க்கான விருது கிருஷ் படத்துக்காக, சென்னை இஎப்எக்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Asok
பதிவு செய்தது: 11 Jun 2008 12:48 pm
Best wishes to and Congratulations, Keep performing the same way.geting national award is much more difficult than getting on oscar award.All the best

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்